உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது பல்வேறு உலகநாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சில நாடுகள் தங்களது நாட்டிலுள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா தங்களது நாட்டிலுள்ள ரஷ்யதூதரகத்தில் பணிபுரிந்து வரும் 18 அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories