Categories
தேசிய செய்திகள்

18 வயசு ஆகலையா…? அப்போ இனி இது வாங்க முடியாது…! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

சிம் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு  முக்கியமான தகவல் ஒன்று வந்துள்ளது. சிம் கார்டு தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி சில பேருக்கு சிம் கார்டு வாங்குவது எளிதாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிம் கார்டு வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது புதிய விதிமுறைப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வழங்க கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டம் சிறுவர்களின் பெயரில் சிம் கார்டு பதிவு செய்வதை தடுக்க வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் சிம்கார்டு வழங்கப்படாது. புதிய விதிமுறைகளில் மேலும் சில அம்சங்கள் உள்ளன. 18வயதுக்கு மேற்பட்டவர்கள் சிம் கார்டு வாங்கும்போது ஆன்லைன் வெரிஃபிகேஷன் செய்தாலே போதும் என்கிற வசதி தற்போது வந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது டிஜிலாக்கரில்  உள்ள ஆதார், சைலன்ஸ் போன்றவை ஆவணங்களை வைத்தே கேஒய்சி சரிபார்ப்பு முடிக்கலாம். இந்த kyc  சரிபார்ப்பு கட்டணமாக ஒரு ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே சிம்கார்டு வாங்கும் வசதி வந்துள்ளது. பிரீபெய்டு சிம் கார்டை போஸ்ட் பெய்டு சிம் கார்டாக மாற்றும் வசதி ஈஸியாக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிபி மூலமாக இந்த வேலையை முடிக்கலாம்.

Categories

Tech |