Categories
தேசிய செய்திகள்

18 வயதில் மேஜர் கிடையாது…. இனி திருமணம் செய்ய முடியாது…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!

சென்ற ஆண்டு சுதந்திர தினவிழா அன்று உரையாற்றியபோது, பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருந்தார். அதன்படி, தற்போது திருமண வயதை 21-வயதாக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்ற ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில், நம் நாட்டின் மகள்கள், சகோதரிகளின் நலன் குறித்து இந்த அரசு எப்போதுமே அக்கறை எடுத்து வருகிறது.

நமது மகள்களை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காக்க அவர்களுக்கு சரியான வயதில் திருமணம் நடக்க வேண்டியது அவசியம். அதனால் பெண்களின் திருமண வயதை 18- வயதிலிருந்து 21- வயதாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.இந்தநிலையில் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தொடர்ந்து திருமண சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த திருமண வயது உயர்வு தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் சிறப்பு குழு ஒன்று சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்த குழுவில் அரசுத் துறை நிபுணர் பிகே. பால் சுகாதாரத்துறையினர், உயரதிகாரிகள், மகளிர் மற்றும் வளர்ச்சித் துறை அதிகாரிகள் சட்டத்துறை அதிகாரிகள் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர்.மேலும் இந்த குழு தனது பரிந்துரைகளை கடந்த டிசம்பர் மாதம் வழங்கியது. அதில் 21 வயதில் திருமணம் நடந்தால்தான் பெண்களால் ஆரோக்கியமான முறையில் கர்ப்பம் தரிக்க முடியும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று தற்போது 21 வயதாக திருமண வயதை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் படியாக அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும்.

நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றும் பால்ய விவாகங்கள் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக கிராமங்களில் பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இன்னும் சரியாக இல்லை. அதனால் சிறுவயதிலேயே பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து விடுவதால், அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. முதல் பிரசவத்தின்போது, இறக்கும் பெண்களின் விகிதம் உயர்ந்து இருக்கிறது. அதனால்தான் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அரசிடம் வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, இது தொடர்பான உறுதிமொழி அளித்தார். தற்போது அதை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |