Categories
மாநில செய்திகள்

18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி…? தமிழக அரசு அறிவிப்பு…!!!

ஐசிம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதனால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் வழங்கிய பின்பு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நேர்வழி இயக்கம் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த திட்டம் வகுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |