Categories
மதுரை மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்…. இன்று முதல் முன்பதிவு செய்யலாம்…. மதுரை மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்புசி செலுத்திக்கொள்ள http://www.maduraicorporation.co.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இணைய வசதி இல்லாதவர்கள் தடுப்பூசி மையத்திற்கு நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். அதன்படி இன்று மாலை முதல் தடுப்பூசி போட்டு கொள்ள முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |