Categories
மாநில செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. முன்பதிவின்றி தடுப்பூசி…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பின்னர் தான் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் கே.பி கார்த்திகேயன் தெரிவித்துள்ளனர். இதற்காக மாநகர் முழுவதும் 12 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |