Categories
தேசிய செய்திகள்

18 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 4 பேருக்கு வலைவீச்சு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் நக்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண் கடந்த 30-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்‌. இதே பகுதியில் வசிக்கும் 4 பேர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

அப்போது 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இளம்பெண் காவல் நிலையத்தில் 4 பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |