வயதுக்கு வந்து இருந்தால் போதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரும் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18 க்கு மேல் இருக்க வேண்டும். அதனைப்போலவே ஆண்களுக்கான திருமண வயதும் 21 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்பவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம். அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் வயதுக்கு வந்து இருந்தால் போதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தரும் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இஸ்லாமிய மத சட்ட விதிகளின்படி 18 வயது நிரம்பாத பூப்பெய்திய சிறுமிகள் விரும்பினால், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாட்டில் இளம் வயதில் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. இந்த திடீர் உத்தரவு இளம் வயதினருக்கு மகிழ்ச்சியையும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.