இன்னும் ஓரிரு நாட்களில் 18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் அறிவிக்கப்படும் என டெல்லி சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா தொற்றில் 2ஆம் அலை மிகவும் பதித்துள்ள நிலையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் தேவையான தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன், வெண்டிலேன்ட்டர்கள் போதிய அளவு இல்லாததால் இந்த நிலைமையை தடுக்க மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதுமான அளவிற்கு இருப்பு இல்லை என்றும், ஆர்டர் கொடுத்த தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து எந்தவித தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் ஓரிரு நாட்களில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும், அதற்குரிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து டெல்லியில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று பதித்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தடுப்பூசி போடுவதன் மூலம் பாதிப்பு விகிதம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.