நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருக்கின்றனர்.
கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையான ஆர்த்தி கணேஷ் இருவருடைய பிரிவையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருவரையும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதாவது பிரபல நகைச்சுவை நடிகையான ஆர்த்தி, தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “கிட்டத்தட்ட ஐஸ்வர்யா-தனுஷ் இருவரும் 18 ஆண்டுகள் அன்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
தற்போது அந்த வாழ்க்கை வீணாகி விடக்கூடாது. இது ஒரு சின்ன பிரிவு தான் விட்டுக்கொடுத்து குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இருவரும் வேறு வேறு பாதையில் செல்லாமல் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இறைவனிடம் மனதார வேண்டி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.