ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. இதில் 25 கிலோ தங்கமும், பணமும் கொள்ளை அடிக்கபட்டதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையினரின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்று முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.