Categories
தேசிய செய்திகள்

குறைந்த தினத்தில் 18 கிலோ எடை குறைப்பு…” பெண் கூறும் பிட்னெஸ் சீக்ரெட்”… என்னனு பார்ப்போமா..?

ஓமம் வாட்டர் குடித்தே 18 கிலோ எடை குறைத்த பெண்ணின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இன்றைய நாகரீக வாழ்க்கையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் உடற் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். ஜங் புட், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கின்றது. உடல் எடையை குறைத்து தங்களை பிட்டாக வைத்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். டில்லியைச் சேர்ந்த 35 வயது பெண்ணான அனுக்ருதி அரோரா.  இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் ஒரு வருட கடின முயற்சியில் 79 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 18 கிலோ அளவிற்கு குறைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது நான் திருமணமான போது ஃபிட்டாக இருந்தேன். பின் இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு உடல் நலத்தில் என்னால் போதிய அக்கறை காட்ட இயலாததால் உடல் எடை அதிகரித்தது. குழந்தை பெற்ற பிறகு பெண்களின் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்று. இருந்தாலும் எனது உடல் எடையை மிக அதிக அளவில் அதிகரித்து அதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடல் எடையை குறைக்க முடிவு செய்து, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட  உணவுகளை தவித்தேன். தற்போது என் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவர் உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொண்ட வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், சீந்தில் இலை, கோதுமை புல் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினேன். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை காலையில் எடுத்துக்கொண்டேன். மதிய உணவிற்கு கீரை, பருப்பு கடைசல் போன்ற உணவுகளை எடுத்தேன். எனது உணவுமுறையில் மாற்றம் மேற்கொண்டு, பிறகு ஜிம்மில் சேர்ந்து பத்து கிலோ அளவிற்கு உடல் எடையை குறைத்தேன்.

உடல் எடையை குறைக்கும் பயிற்சிகளோடு யோகாசனம் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொண்டேன். தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சியை அதிதீவிரமாக மேற்கொண்டதன் விளைவாக எனது உடல் கட்டுக்கோப்பாக மாறியது. இந்த முயற்சியை மேற்கொள்ளும் போது உடல் மட்டுமல்லாது மனமும் ஒருங்கிணைந்தது. நான் உடல் எடையை குறைப்பதை எனது குடும்பத்தினர் மட்டுமின்றி, உறவினர்களும் வெகுவாக பாராட்டினர்.

Categories

Tech |