சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 55,929ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 846 பேர் உயிரிழந்துள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 864ஆக உயர்ந்துள்ளது.