பாடத்திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எனவே முதலமைச்சர் ஒப்புதலோடு 18 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். CEO, DEO, இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என 18 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக இன்று காலை ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்தாவது, ” பாடத்திட்டம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார். சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார்” எனக் கூறினார். தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் கொரோனவால் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாக உள்ளது. மாத இறுதிக்குள் தயாராகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் பாடத்திட்டத்தை குறைக்கும் பணியில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதற்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.