Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரதில் கொரோனாவுக்கு 18மாத குழந்தை உயிரிழப்பு ….!!

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகின்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மூவாயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 1,025 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 44,094  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டதில் 3796 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 18 மாத ஆண் குழந்தை கொரோனவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 மாத ஆண் குழந்தை தற்போது உயிரிழந்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. 765 பேருக்கு தோற்று உறுதி செய்யப் பட்டதில் 452 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Categories

Tech |