Categories
தேசிய செய்திகள்

கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்துகொண்டு சொந்த ஊர் செல்ல முயன்ற 18 பேர் கைது..!

கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 18 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் போலீசாரிடம் பிடிபட்டனர்.

அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்ததாக அம்மாவட்ட டி.எஸ்.பி உமகாந்த் சவுத்ரி கூறியுள்ளார். தற்போது லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், லாரியின் கலவையில் தொடரில் ஒளிந்திருந்தவர்கள் மற்றும் டிரைவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனவால் 11,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வீரியமாக பரவ தொடங்கியது முதலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், பலர் நடைபயணம் மேற்கொண்டு சொந்த மாநிலத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர். மேலும், பலர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகாரஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், வடமாநிலங்களில் புலப்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று கான்கீரிட் லாரியின் கலவை தொட்டியில் ஒளிந்து கொண்டு மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவுக்கு செல்ல முயன்ற சுமார் 18 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Categories

Tech |