Categories
தேசிய செய்திகள்

“பரோட்டாவுக்கு 18%, டிராக்டருக்கு 12%” பிரதமர் மோடியே சாதனை படைத்துள்ளீர்கள்…. ராகுல் காந்தி பளீர்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர்.

வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி அதிகரிப் பு போன்றவற்றை கொடுத்து மக்களுக்கு கொடுத்து சாதனை படைத்துள்ளீர்கள் என்று கூறினார். அதன்பிறகு தன்னுடைய twitter பக்கத்திலும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 35 வருடங்களில் பணவீக்கம் அதிகரித்தது ஏன்? 45 வருடங்களில் வேலையின்மை அதிகரித்தது ஏன்? பரோட்டாகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது ஏன்? விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் டிராக்டர்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது ஏன்? என்ற கேள்விகளை பதிவிட்டுள்ளார். அதோடு பிரதமர் அவர்களே பாரத் ஜோடா இயக்கம் இன்னும் பல கேள்விகளை உங்களிடம் கேட்க இருக்கிறது. மேலும் நீங்கள் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |