ஐரோப்பிய நாடுகளில் 18 வயது மேற்பட்டோருக்கு 3 ஆவது டோஸாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த ஜெர்மனி, கிரீஸ் உள்ளிட்ட 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகளை தீவிர படுத்தியுள்ளனர். குறிப்பாக பல நாடுகளில் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ளனர். இதற்காக பைசர் நிறுவனம் தயரிக்கும் கொரோனா தடுப்பூசியை 3 ஆவது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய கூட்டமைப்பின் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் 2 ஆவது டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு குறைவாக இருந்து வருகிறது. இதனால் 3 ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின் 6 மாதங்கள் கழித்து 3 ஆவது பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்ளலாம் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மருந்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.