பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் தனது 18 வயதில் தொலைத்த சைக்கிள் மீண்டும் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் பிரான்சிலுள்ள Hérault என்ற கிராமத்தில் Joseph Carayon என்பவர் வசித்து வருகிறார். Josephக்கு 10 வயது இருக்கும்போது 1946 ஆம் ஆண்டு 2-ம் உலகப்போரிலிருந்து திரும்பிய அவரது தந்தை, அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு சைக்கிளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த அரிய சைக்கிளை Joseph தனது 18 வயதிலேயே தொலைத்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அண்மையில் பழம்பொருட்கள் சேகரிக்கும் வழக்கம் கொண்ட Josephஇன் நண்பரான Thomas Christiny என்பவரிடம், ஒரு பழைய பொருட்கள் கடையில் வேலை செய்யும் அவரது நண்பர், தன்னிடம் ஒரு பழைய சைக்கிள் உள்ளதாகவும், அதில் ‘Joseph Carayon, Abeilhan, Hérault’ என்று எழுதப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையில் Josephஐத் தெரியாதவர்கள் யாரும் அந்த கிராமத்தில் கிடையாது. ஏனென்றால் Joseph தற்போதும் அங்கு காலையில் செய்தித்தாள் போடுகிறார். ஆகவே அந்த சைக்கிள் Josephக்கு உடையது என்பதைப் புரிந்துகொண்ட Thomas, அதை விலைக்கு வாங்கி வந்து தன் நண்பர் Josephஇடம் ஒப்படைத்திருக்கிறார். மரத்தாலான கைப்பிடிகள் கொண்ட காணாமல்போன அந்த சைக்கிள் இப்போதும் அப்படியே இருப்பதைக் கண்ட Joseph மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் Josephஅந்த சைக்கிளுக்கு அழகாக வர்ணம் பூசி பத்திரமாக வைத்திருக்கிறார்.