Categories
உலக செய்திகள்

18 வயதிற்கு மேல் கொரோனா தடுப்பூசி இலவசம்…. ஜார்கண்ட் முதல்வர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பு ஊசி போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  தடுப்பூசி போடும் பணி தீவிரமாகபட்டு வந்தது. இதனை தொடர்ந்து தற்போது  கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகி வரும் காரணத்தினால் மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அதற்கான தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக அரசுகளும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தடுப்பூசி கான விலை நிர்ணயிக்கப் பட்டதாகமும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தேசிய கொரோனா தடுப்பூசிகொள்கை வருகிற 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த கோவிஷீல்டு தடுப்பூசி விலையை சீரம் இந்தியா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. எனவே மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 என விற்பனை செய்யப்படும் என்று அறிவித்ததுள்ளது. இந்நிலையில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் 50% இந்திய தடுப்பூசி திட்டத்திற்கும் மீதமுள்ள 50 சதவீதம் மாநில அரசுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தை 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் ஜேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என்றும் எண்ணபடுகிறது. இதுபோல ஏற்கனவே மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், கேரளா போன்ற மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |