Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு…. முதல்வர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

ஆம் ஆத்மி கட்சி வெற்றி அடைந்தால் 18 வயது மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த வருடம் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, மின் கட்டண குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். எனவே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சி போட்டியிடும் என அறிவித்தார். இதனையடுத்து மேற்கண்ட மாநிலங்களுக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு சட்டப்பேரவை தேர்தல் குறித்து அந்தந்த மாநில நிர்வாகிகளுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார். அதாவது “பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 18 வயது மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றது. ஆனால் ஆம் ஆத்மி வெற்றி அடைந்தால் கண்டிப்பாக பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Categories

Tech |