Categories
தேசிய செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி…. காணொலி காட்சி மூலம் மோடி…. மருத்துவர்களிடம் ஆலோசனை….!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் கொரோனா வைரஸ் குறித்து மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்

சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத்தீ போல் பரவி மக்களின் உயிரை சூறையாடியது. இதில்  மிக மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. மேலும் இந்தியாவில் மட்டும் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக காணப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்குள்ளேயே 2 லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்காக உலகநாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவர்களிடம் நேற்று மாலை 4 மணி அளவில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அதன்பிறகு மருந்துகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுடனும் காணொலி காட்சி மூலம் 6 மணி அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை  தொடர்ந்து 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி  போடுவதற்கு தகுதியுடையவர்கள் அனைவரும் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆகையால் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக உற்பத்தி நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணி அளவில் காணொலி காட்சி மூலம் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா தொடரிலிருந்து அனைவரையும் காப்பாற்றிக் கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |