Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவர்களுக்கு விற்பனை செய்ய கூடாது…. நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்…. போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மதுபான கடையில் வேலை பார்க்கும் விற்பனை மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமை தாங்கியுள்ளார்.

இந்நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், 18 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து டாஸ்மாக் கடைகளில் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் தாசில்தார் பாரதி வளவன், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செல்வராஜ் போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |