Categories
தேசிய செய்திகள்

24 வருடங்களில் 18 பெண்கள்… மனைவியின் மீது கொண்ட கோபம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

தெலுங்கானாவில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. பின் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது.

அதனை ஆய்வு செய்ததில் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த நபர் தான் இந்த கொலையும் செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதன்பின் 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கொலையாளியான மைனா ராமுவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் 45 வயதான மைனா ராமுலு கடந்த 24 வருடங்களில் 16 பெண்களை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவருக்கு 21 வயதில் திருமணம் நடந்துள்ளது. அப்பெண் சில நாட்கள் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமுலு அன்றிலிருந்து பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் தருவதாக அழைத்துச் சென்று கற்பழித்து கொலை செய்து அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து கொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதேபோன்று 2003 முதல் 2019 வரை 16 பெண்களை கொலை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |