லண்டனில் கால்பந்து விளையாடிய போது பிரச்சனை ஏற்பட்டதில், ஒரு சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
லண்டனில் உள்ள Twickenham என்ற பகுதியில் இருக்கும் கால்பந்து விளையாட்டு மைதானத்திலிருந்து நேற்று மாலையில் காவல் துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. எனவே, காவல்துறையினரும், அவசர உதவிக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்ற போது 18 வயதுடைய சிறுவன் கத்திக்குத்து காயங்களோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அடுத்த சில நிமிடங்களில் சிறுவன் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தற்போது வரை எவரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.