உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் எட்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஷிவா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது காலை ஏழு முப்பது மணி அளவில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் பதறியடித்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துணையுடன் வந்த காவல்துறையினர், 32 பேரை கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை, 28 பேரை கொண்ட மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவற்றின் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணி தொடங்கினர். காலை 9 மணியளவில் தொடங்கிய சிறுவனை மீட்கும் பணியில் சிறுவன் 90 அடி ஆழத்தில் சிக்கியுள்ளது முதலில் கண்டறிந்தனர்.
அச்சிறுவனுக்கு ஆக்சிஜன், குளுக்கோஸ், பிஸ்கட், உள்ளிட்டவற்றை சிறுவனுக்கு கொடுத்தனர். பிறகு loop techniqueஐ பயன்படுத்தி சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர் காலை 9 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி மாலை நான்கு முப்பது மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறுவனை உயிருடன் மீட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினர்.