Categories
தேசிய செய்திகள்

1800 ஊழியர்களின் வேலையை…. காலி செய்த மைக்ரோசாப்ட்…. அதிர்ச்சி….!!!!

பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் மட்டும் 1800 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதனால் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாடர்ன் லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் என்று நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் வேறு வேலை பார்த்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே சில ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில் சுமார் 1800 ஊழியர்களை நீக்கிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் மட்டுமல்லாமல் டெஸ்லா உள்ளிட்ட பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை நீக்கி உள்ளன.

செலவுகளை குறைப்பதற்காகவும், மறு சீரமைப்புக்காகவும் ஊழியர்களை நீக்கியுக்கதக நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும் பொருளாதாரச் சூழல் மற்றும் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக ஊழியர்களை நீக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |