இந்த வருடம் ஆண் துணையின்றி ஹஜ் கமிட்டி மூலம் 1800 பெண்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ் பயணம் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் அனைத்து பக்தர்களும் செல்ல முடியாத நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் இன்றி அனைவரும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மும்பை ஹஜ் ஹவுசில் நடந்த விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, இந்த ஆண்டு ஹஜ் பயணிகள் மானியம் இன்றி பயணம் செய்யவுள்ள நிலையில் அவர்களுக்கு கூடுதல் செலவு வராத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஹஜ் பயணம் நடைமுறைகள் 100 சதவீத டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ள நிலையில் சவுதி அரேபியாவில் நியாயமான விலையில் பயணிகளுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் 22,636 பேர் ஹஜ் குழுக்கள் மூலம் 55,601 இந்திய இஸ்லாமியர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதில் ஆண்கள் துணையின்றி (மெஹரம்) 1,800 க்கும் மேற்பட்ட பெண்கள் செல்ல உள்ளார்கள். இதற்கிடையில் பயணத்திற்கு 83,140 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் கவுகாத்தி, கொல்கத்தா, ஆமதாபாத், ஸ்ரீநகர், கொச்சி, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட 10 இடங்களில் இருந்து பயணிகள் செல்ல உள்ளனர். மேலும் கொச்சியில் இருந்து தமிழகம், அந்தமான் நிக்கோபார், கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார்.