கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம் தூர்வாரும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஆச்சான் குளம், நீலம்பூர் முத்துகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் விதமாக இக்குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரியை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1827 பணிகள் சுமார் 500 கோடி நிதி திட்டத்தில் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.