சவுதியில் கொரோனா தாக்கம் காரணமாக 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டின் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைந்துள்ளது.
சவுதி அரேபியாவின் வட பிராந்தியத்தில் டாபுக் மகாணம் இருக்கின்றது. அந்த மாகாணத்தின் கல்வி இயக்குனரகம், கொரோனா பாதிப்பால் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், டாபுக்கில் உள்ள 186 பள்ளிகள், நடப்பு கல்வியாண்டில் முதல் செமஸ்டர் கல்வி கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
அதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பலன் பெறுவார்கள். அவர்களின் பெற்றோர்களுக்கு மொத்தம் ஒன்பது கோடி சவுதி ரியால் மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.