Categories
அரசியல் மாநில செய்திகள்

19மாநிலத்துல ஆளுறோம்…! ”சொல்லுறத கேளுங்க” அப்ப தான் ஒழுங்கா இருக்க முடியும்… திமுகவை எச்சரித்த பாஜக …!!

செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, இப்போ கரண்டை கட் பண்ணிட்டாங்க, பிளக்கை புடிங்கி விட்டால், கரண்ட் இருக்காது, பிஜேபி கூட்டம்  நடக்காது என்று நினைக்கின்றார்கள். இதே மாதிரி போக்குல போனீர்கள் என்றால் உங்களுடைய பிளக்கை புடுங்கிவிடுவார்கள் பிஜேபிகாரங்க ஞாபகம் வைத்து கொள்ளுங்கள். நீங்க ஒத்துப்போனா தான் ஒழுங்காக இருக்க முடியும். எத்தனை தடவை சொல்கிறோம் என்று தெரியல.

தலைவர் அண்ணாமலை சொல்லிகிட்டே இருக்காரு. நாங்க 19 மாநிலத்தில் ஆளுகின்ற கட்சி என்று சொல்லிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. என்னை பொருத்தவரையில் திமுக ஒரு பேரூராட்சி இயக்கம்தான். அவர் எப்படி நம்மல வந்து மத்திய அரசாங்கம் என்று சொல்லாம, வேற பேரு வச்சு கூப்பிடுகிறாரோ, அதே மாதிரி இவங்களையும் வேற பேர் வைத்து தான் கூப்பிடனும்.

எதற்காக சொல்கிறேன் என்றால் ஒரு செங்கலை தூக்கி காட்டினார்கள், செங்கலை தூக்கி காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை பார்த்தீர்களா என்று ஒரே ஒரு செங்கலை காட்டுனாங்க. சாதிக்க கூடியவர்கள் பிஜேபி, மோடி ஐயா அவர்கள் ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் கொஞ்சம் வேறு பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு தேதிக்கு பிறகு தமிழ்நாட்டிற்குள் நிச்சயமாக பிஜேபி இதைவிட இன்னும் வேகத்தில் வேலை செய்வார்கள்.

மக்களை சந்திக்கக்கூடியவர்கள் என்பதை நியாபகம் வைத்து கொள்ளுங்கள். மீனவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருக்கக் கூடியவர்கள். உங்களைப்போன்ற சகோதரர்களை எல்லாம் தலைமை பொறுப்பில் பார்த்து அழகு படுத்தியவர்கள் தான் ஐயா மோடிஜி அவர்கள் என்பதை மனதில் வைத்து நீங்கள் இந்த இயக்கத்திற்கு பேருதவியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |