Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

19 பந்துகளில் அதிரடி அரை சதம்….. “புதிய சாதனை படைத்த ஆஸி வீரர் கிரீன்”…. அது என்ன தெரியுமா?

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் அதிரடியாக ஆடியதால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்து வென்றது.. இதனால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா தொடரை கைப்பற்றியது.

இருப்பினும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் ஒரு சாதனையை படைத்துள்ளார். அதாவது, தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 19 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்காக அதிவேகமாக அரை சதம் அடித்த பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்..

முதலிடத்தில் 18 பந்துகளில் அடித்து டேவிட் வார்னரும், மேக்ஸ் வெல்லும் இருக்கின்றனர்.. கிரீன் 1 பந்துகள் குறைவாக அடித்து இருந்தால் இவர்கள் இருவரது வரிசையிலும் இணைந்து இருக்கலாம். அதே போல டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து முதல் 2 இடங்களிலும் தனது பெயரை பதிவு செய்து வைத்துள்ளார்.. இந்நிலையில் தான் தற்போது கேமரூன் கிரீனும் அவருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இப்போட்டியில் கிரீன் 21 பந்துகளில் 7 பவுண்டரி,3 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |