விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பள்ளம் பட்டியில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவருடைய கணவர் இறந்து விட்டதால் 2 ஆவது திருமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போது ஜான்சிராணியுடன் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிமுகமாகியுள்ளார். இருவரும் செல்போனில் பேசி காதலித்து வந்த நிலையில் தனக்கு பண தேவை இருப்பதாக கூறிய கார்த்திக் ராஜா, தாயாரின் தாலி செயினை ஜான்சி ராணியிடம் கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகையை வாங்கிவிட்டு மாயமானார்.
அதன்பிறகு தான் கார்த்திக் ராஜா கொடுத்தது போலி நகை என்பது தெரிய வந்துள்ளது. இதனாக இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கார்த்திக் ராஜா மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த புகாரில் போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 19 பெண்களை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி 80 சவரன் நகையை மோசடி செய்துள்ளார். பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வழங்க இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.