Categories
மாநில செய்திகள்

19 பேரூராட்சிகள் நகராட்சியாக மாற்றம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் கே. என். நேரு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நகர்ப்புற மக்கள்தொகை 48. 45% என்றும் இந்த ஆண்டு தற்போதைய மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை 53% உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.

இதையடுத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தற்போது 19 பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்துவது குறித்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, லால்குடி, சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கணசாலை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, கரூர் மாவட்டம் புகளூர், பள்ளப்பட்டி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை மற்றும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய 19 பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |