லண்டனில் 19 மாடிக்கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லண்டனில் பாப்பலரில் இருக்கும் 19 மாடி கட்டிடத்தில் உள்ள 8,9 மற்றும் 10 போன்ற தளங்களில் இருக்கும் வீடுகளில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தளங்களில் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
Fire tears through a tower block in east London pic.twitter.com/gjvpT3Ahue
— The Sun (@TheSun) May 7, 2021
எனினும் தீயணைப்பு வீரர்கள் சுமார் 125 பேர் இணைந்து 3 மணி நேரமாக போராடி நெருப்பை அணைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தால் ஏற்பட்ட புகையால் இருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தற்போது வரை உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் அதிகாரிகள், தீ பற்றி எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.