Categories
உலக செய்திகள்

19- வது ஆசிய விளையாட்டு போட்டிகள்….. செப்டம்பர் முதல் அக்டோபர் வரை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

19- வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை சீனாவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிங் அறிவித்துள்ளது. சீனாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் கொரோனா பரவால் அதிகரித்த காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஹாங்சோ நகரில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி முடிந்த அடுத்த பத்து மாதங்களில் 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. ஜாகர்தாவில் நடைபெற்ற 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |