Categories
மாநில செய்திகள்

19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு…. நீங்களும் உடனே இணைச்சிருங்க…!!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று ணைப்பு செய்துகொள்ளலாம்.

இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தொடங்கிய முதல் நாளே சிறப்பு முகாம்கள் மூலம் 2.28 லட்சம் இணைப்புகளும், ஆன்லைன் மூலம் 2.02 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 19.24 லட்சம் மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Categories

Tech |