Categories
கிரிக்கெட் விளையாட்டு

19 ஆண்டுகளுக்குப் பிறகு …. வாகனின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்….!!!

டெஸ்ட் கிரிக்கெட்டியில்  ஒரு வருடத்தில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார் .

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 1,544 ரன்கள் குவித்துள்ளார் .இதன் மூலமாக ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் .

இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கடந்த 2002-ஆம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  1,481 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் ஜோ ரூட் இந்த சாதனையை முறியடித்துள்ளார். அதேசமயம் ஒட்டுமொத்தத்தில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணி வீரர் முகமது யூசுப் கடந்த 2006-ம் ஆண்டு 1,788 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |