தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என மொத்தம் 19 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 11,125 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை பிற மாநிலங்களில் இருந்து வந்த 942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 11,835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு வருவோர் மற்றும் வெளிமாநிலம் செல்வோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே இல்லாத அளவு தமிழகத்தில் தான் இதுவரை 4,21,480 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. 41 அரசு பரிசோதனை மையங்களும், 27 தனியார் பரிசோதனை மையங்களும் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.