Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு 19 மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை!

கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க சிறப்பு நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 19 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், ராமச்சந்திரா, அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட 19 பேர் தமிழக அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த நிபுணர் குழுவுக்கு அரசு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்த 64 வயது பெண் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |