தமிழகத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகளில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருக்கிறார்கள். சமூக விலகலை கடைப்பிடித்து அன்றாட பொருட்களை வாங்கி செல்ல முடியாத நிலை நிலவுகின்றது. இந்நிலையி கூட்டுறவு துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 500 ரூபாய் மதிப்பில் விலையிலான மளிகை பொருட்கள் தொகுப்புகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான பொருட்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பின் விலை வெளி சந்தையில் 590 வரை இருக்கும் என்று வரையறுக்கப்படுள்ளது. துவரம் பருப்பு அரை கிலோ, உளுந்தம் பருப்பு அரை கிலோ, கடலைப்பருப்பு கால் கிலோ, மிளகு 100 கிராம்,சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம் வழங்கப்படும். புளி 250 கிராம், பொட்டுக்கடலை 250 கிராம், மிளகாய் 150 கிராம், தனியா 200 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம்,டீ தூள் 100 கிராம், உப்பு 1 கிலோ, பூண்டு 250 கிராம், கோல்டு வின்னர் சன்பிளவர் ஆயில் 200 கிராம், பட்டை 10 கிராம், சோம்பு 50 கிராம், மிளகாய்த்தூள் 100 கிராம் ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.