தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தூத்துக்குடியில் இதுவரை 194 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 114 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் குணமடைந்துள்ள நிலையில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 567 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 52.70% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.