பிலிப்பைன்ஸில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக பிலிப்பைன்ஸில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு பிலிப்பைன்ஸில் தொடர் மழை பொழிவால் கடும் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. மேலும் கொம்பாசு மற்றும் பெங்குவாட் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மேற்கு பலவான் மாகாணத்தில் உள்ள நர்ரா நகரில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே மழை வெள்ளத்தில் மாயமான 13 பேரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதேசமயம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸை சுமார் 20 புயல்கள் ஒவ்வொரு ஆண்டும் தாக்குவது குறிப்பிடத்தக்கது ஆகும்.