ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கார்ஹ்ர் மற்றும் லோஹர் மாநிலங்களில் தலிபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் வான் வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் நேற்று மதியம் 11 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து ஹிஷாரத், ஷேர்ஜாத் மாகாணத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் சாலையோர குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரே நாளில் வெவ்வேறு பகுதியில் சேர்ந்து மொத்தம் 19 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.