Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களும் முடங்கி உள்ளதனால் மளிகை பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 மற்றும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய இலவச பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ரூ.500க்கு மளிகை பொருள் தொகுப்பு விற்பனை தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மளிகை பொருட்கள் தட்டுபாடு மற்றும் விலையேற்றம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மக்கள் கூடுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் காலை 6 மணி முதல் 1 மணிவரை கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குறைந்த நேரத்திலும் அதிக மக்கள் கூடுவதால் அதனை தடுக்கும் நோக்கத்தில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், மிளகாய், மஞ்சள் தூள், டீ தூள், உப்பு, பூண்டு, சோம்பு, மிளகாய் தூள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.500க்கு வழங்க உள்ளனர். முதலில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு மட்டும் இந்த மளிகை பொருட்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.500 மதிப்புள்ள 19 வகையான மளிகை பொருள்கள் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் மளிகைப்பொருட்களை வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Categories

Tech |