பாகிஸ்தானில் 19 வயது நிரம்பிய கான்ஸ்டபிளை 55 வயது டிஎஸ்பி திருமணம் செய்துள்ளார்.
நரோவால் ஷபீர் சட்டா(55) என்பவர் பாகிஸ்தானில் டிஎஸ்பி-யாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீழ் இக்ரா என்ற 19 வயது இளம்பெண் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இக்ராவை ஷபீர் காதலித்துள்ளார். ஷபீரின் காதலை ஏற்றுக் கொண்ட இக்ரா அவரையே திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருவருக்கும் இடையில் 36 வயது வித்யாசம் இருக்கும் பொழுது நடந்த இந்த திருமணத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அதே நேரத்தில் காதல் தம்பதிக்கு சிலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ தனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று சிந்திக்கும் வயது இக்ரா-க்கு இருக்கிறது என்ற கருத்தும் வெளியாகி வருகிறது.