19 வயது காதல் மனைவியை 17 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம்,சித்தூர் மாவட்டம் துரு பள்ளியை சேர்ந்த காயத்ரி என்பவர் கல்லூரியில் படித்து வருகிறார். சீத்தமாகுள பள்ளியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவனும், காயத்ரி என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் இருந்து வந்துள்ளனர். இது இருவரின் வீட்டிற்கு தெரிய வரவே காயத்ரியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சிறுவன் மாணவன் என்பதால் இருவரையும் அவரவர் வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். காயத்ரிக்கு ரகசியமாக அவர் வீட்டார் திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே சிறுவன் காயத்ரியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அச்சிறுவனை தேடி வருகின்றனர்.