மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது பெண்ணை மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் சட்டம், தண்டனை என இருந்தாலும் இந்த பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை வெளியே செல்ல அஞ்சும் சூழல் தற்போது நிலவி வருகிறது. பாலியல் வன்கொடுமை, கொடூர கொலைகள் முடிவு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை. மகாராஷ்டிராவில் தானேவில் 19 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தப் பெண் சென்று கொண்டிருந்தபோது வழி மறித்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்து பணம், நகைகளை பறித்து அவர்களை அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து வைத்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். அந்தப் பெண் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.