Categories
உலக செய்திகள்

19,000 வேலையாட்களை வீட்டிற்கு அனுப்ப… ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு…!!

ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா பெரும் பொருளாதார சரிவை மேற்கொண்டுள்ளது.

நாடெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதார இழப்பையும் மனித உழைப்பையும் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தற்போது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் பெரும் பொருளாதார சுமையை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக விமான பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் சென்ற மார்ச் மாதம் நலிவடைந்த நிறுவனங்களுக்கு 25 பில்லியன் டாலர்கள் வழங்க வேண்டுமென விமான நிறுவனங்கள் தெரிவித்தன. அதன்படி நிதி உதவியாக அமெரிக்கா 25 பில்லியன் டாலர்களை வழங்கியது.

தற்பொழுது மேலும் 25 பில்லியன் டாலர்களை வழங்க வேண்டுமென விமான நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதால் அமெரிக்கா வேறுவழியில்லாமல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 19,000 பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இந்த பொருளாதார சரிவால் 50 சதவீத விழுக்காட்டிற்கும் குறைவாக விமானப் பயணங்களை திட்டமிட அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |