செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்ற வகையில் அவர்களுக்கான சிகிச்சை மற்றும் மருத்துவ முறைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இரண்டாவது அலை குறிப்பாக மே 7ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட நிலையினை மனதில்கொண்டு மூன்றாவது அலை என்று ஒன்று வந்தாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
என்று ஏற்கனவே அறிவுறுத்தி அவரே நிறைய மருத்துவமனைகளுக்கு வந்து போடப்பட்டு இருக்கின்ற படுகைகளை பார்வையிட்டு கூடுதலாக செய்யப்பட்டு வருகின்ற மருத்துவ மேம்பாட்டு வசதிகளை ஆய்வு செய்திருக்கிறார். குறிப்பாக இந்த மூன்றாவது அலை என்று ஓன்று வந்தால் குழந்தைகளை அதிகமாக பாதிக்கும், யாரெல்லாம் தடுப்பூசி போடவில்லையோ அவர்களுக்கு பாதிப்பு கூடுதலாக இருக்கும் என்கின்ற வகையில் அன்றைக்கு குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவுகள் எல்லா மருத்துவமனைகளிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
அது இப்போதும் கூட எல்லா மருத்துவமனைகளிலும் நடைமுறையில் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகளில் இருக்கின்ற படுக்கைகள் கொரோன நல மையங்கள் என்கின்ற வகையிலான அந்த படுக்கைகள் எல்லாம் சேர்த்து தமிழகத்தில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 902 படுக்கைகளும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று இருந்துகொண்டிருக்கிறது. தொற்றின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து இருந்தாலும் கூட, இதுவரை மருத்துவமனைகளில் இந்த படுகைகளில் சிகிச்சை பார்ப்பவரை பொருத்த வரை 8 ஆயிரத்து 912 பேராக இருக்கிறார்கள்.
1 லட்சத்து 91 ஆயிரத்து 902 படுக்கைகளில் ஏறத்தாழ இரண்டு லட்சம் அளவிற்கு படுக்கைகள் இருந்தாலும் கூட, 8 ஆயிரத்து 912 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பார்த்து வருகிறார்கள். மீதமுள்ள அனைவருமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நம்முடைய சுகாதார துறை செயலாளர் அவர்கள் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட உடன், மருத்துவர் ஆலோசனை பெற்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறார். அந்த வகையில் எல்லா மாவட்டங்களிலும், அதன் அடிப்படையில் அந்த பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.